கனடாவின் லண்டனில் டாக்ஸி கட்டண அறவீடு தொடர்பிலான மோசடிகள் இடம் பெற்று வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
லண்டனை அண்டிய பகுதியில் வாழும் மக்கள் இந்த மோசடிகளில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
டாக்ஸி கட்டணங்களை அறவீடு செய்யும் போது இவ்வாறு மோசடிகள் இடம் பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒருவர் டாக்ஸி சாரதியாகவும் மற்றயவர் டாக்ஸியில் பயணம் செய்தவர் போன்றும் தோன்றி மோசடியில் ஈடுபடுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
டெக்ஸி கட்டணம் செலுத்துவதற்கு உதவுமாறு அருகாமையில் இருப்பவர்களிடம் கூறி அவர்களது வங்கி அட்டைகளை பயன்படுத்தி மோசடிகள் இடம் பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
டாக்ஸி சாரதிகள் பணத்தை பெற்றுக்கொள்ள விரும்பவில்லை எனவும் அவர்கள் வங்கி அட்டைகளின் மூலம் கொடுப்பனவு செய்ய விரும்புவதாகவும் கூறி இவ்வாறு மோசடிகள் இடம் பெறுகின்றன.
சிறு தொகை ஒன்றை டாக்ஸி கட்டணமாக செலுத்த வேண்டும் எனக் கூறி வாங்கி அட்டைகளை பயன்படுத்தி இந்த மோசடி இடம் பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடன் அல்லது டெபிட் அட்டைகளை வழங்கும் போது குறித்த நபர்கள் திட்டமிட்ட அடிப்படையில் மோசடியில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக கனடாவில் டாக்ஸி கட்டண அறவீடு தொடர்பான மோசடிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
டாக்ஸி சாரதி போன்றும் பயணியை போன்றும் நடித்து அருகாமையில் இருப்பவர்களை ஏமாற்றி அவர்களின் வங்கி அட்டைகளை பயன்படுத்தி இவ்வாறு மோசடிகள் இடம் பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
எனவே பொதுமக்கள் இந்த மோசடிகள் தொடர்பில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் இந்த சம்பவங்களை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.