Reading Time: < 1 minute
கனடாவில் ஆளும் கட்சியின் ஆதரவில் சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடொ தலைமையிலான லிபரல் கட்சிக்கான ஆதரவு சரிவடைந்துள்ளது.
குறிப்பாக இளம் கனடியர்கள் மத்தியில் லிபரல் கட்சிக்கான ஆதரவு வீழ்ச்சியடைந்துள்ளது.
நானோஸ் ஆய்வு நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
கொன்சேவடிவ் கட்சிக்கான ஆதரவு லிபரல் கட்சிக்கான ஆதரவு விடவும் 23 வீதம் அதிகம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
18 முதல் 29 வயது வரையிலான இளம் கனடியர்கள் மத்தியில் லிபரல் கட்சிக்கான ஆதரவு சடுதியாக குறைந்துள்ளது.
கருத்துக் கணிப்பில் பங்கேற்ற இளம் கனடியர்களில் 15.97 வீதமானவர்கள் மட்டுமே லிபரல் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கொன்சவேடிவ் கட்சிக்கு 39.21 வீத ஆதரவு காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.