Reading Time: < 1 minute

கனடாவில் ஆயுதக் கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்களவு ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஆயுதக் கடத்தல் விவகாரம் குறித்த விபரங்களை றொரன்டோ பொலிஸார் இன்றைய தினம் வெளியிட உள்ளனர்.

றொரன்டோ பொலிஸ் பிரதானி ஜேம்ஸ் ராமர் இந்த சம்பவம் குறித்த விபரங்களை ஊடகங்களில் வெளியிட உள்ளார்.

இந்த விசாரணைகளின் போது பெருமளவு ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், சிலர் கைது செய்பய்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட ஆயுதங்கள் இன்றைய தினம் நடைபெறவுள்ள செய்தியாளர் சந்திப்பில் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

எவ்வளவு ஆயுதங்கள் மீட்கப்பட்டன எத்தனை கைது செய்யப்பட்டனர் என்பது பற்றிய எந்தவொரு விபரங்களையும் பொலிஸார் தற்போதைக்கு வெளியிடவில்லை.

அண்மைய நாட்களாக கனடாவில் ஆயுத வன்முறைச் சம்பங்களின் எண்ணிக்கை உயர்வடைந்து செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.