Reading Time: < 1 minute

கனடாவில் கோவிஷீல்ட்- அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியின் முதல் இரத்த உறைவு பாதிப்பு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 13ஆம் திகதி கனடாவின் பொது சுகாதார நிறுவனம் ஒரு மின்னஞ்சலில் இந்த பாதகமான நிகழ்வை அனுபவித்த கனேடிய குடியிருப்பாளரின் அறிக்கையைப் பெற்றதாகக் கூறியுள்ளது.

குறித்த கனேடியர் குறைந்த இரத்த உறைவு பாதிப்புடன் வீட்டில் குணமடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுகுறித்து பொதுச் சுகாதார முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்த அறிக்கைகள் மிகவும் அரிதானவை. பயன்பாட்டிற்கான தடுப்பூசிகளை அங்கீகரிக்கும் ஹெல்த் கனடா, இந்த தடுப்பூசியின் நன்மைகள் இன்னும் சாத்தியமான அபாயங்களை விட அதிகமாக உள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.