Reading Time: < 1 minute
அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை பெற்றுக்கொண்ட மற்றுமொருவருக்கு இரத்த உறைவு ஏற்பட்டுள்ளதை கனடா உறுதிப்படுத்தியுள்ளது.
அந்தவகையில் நாட்டில் இதுவரை இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கனடாவின் பொது சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
அல்பேர்ட்டாவில்வசிக்கும் ஒருவருக்கே இவ்வாறு இரத்த உறைவு ஏற்பட்டதாகஅந்த நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இருப்பினும் இவ்வாறு இரத்த உறைவு தொடர்பான அறிக்கைகள் அரிதாகவே பதிவாவதாகவும் கனடாவின் பொது சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.