Reading Time: < 1 minute

கனடாவில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காக காத்திருந்த முதியவர் ஒருவரிடம் கொள்ளையிடப்பட்டுள்ளது.

சிகிச்சைக்காக காத்திருந்த மற்றுமொரு நோயாளி இந்த முதிய நோயாளியிடம் கொள்ளையிட்டுள்ளார்.

றொரன்டோ வைத்தியசாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடுமையான இடுப்பு வலி காரணமாக வைத்தியசாலையில் காத்திருந்த 68 வயது பெண்ணிடம் கொள்ளையிடப்பட்டுள்ளது.

றொரன்டோவின் பிரபல வைத்தியசாலை ஒன்றில் தனது தாயாரை சிகிச்சைக்காக அனுமதிக்க சென்றிருந்த்தாகவும், காத்திருந்த வேளையில் தொலைபேசி அழைப்பு எடுக்க வெளியே சென்ற போது இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது எனவும் அந்த மூதாட்டியின் மகள் எவி லிவிங்டன் தெரிவித்துள்ளார்.

மூதாட்டியின் பணப்பையை பெண் நோயாளி ஒருவர் களவாடிச் செல்ல முயற்சித்துள்ளார்.

நோய்வாய்ப்பட்ட நிலையிலும் தனது தாய் விரைந்து செயற்பட்டு பணப்பையை மீளப் பெற்றுக்கொள்ள போராடி வெற்றி பெற்றுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பணப்பையில் எவ்வளவு தொகை பணம் இருந்தது, பணம் காணாமல் போனதா போன்ற விபரங்கள் வெளியிடப்படவில்லை.

இந்த சம்பவத்தின் போது வைத்தியசாலை பணியாளர்கள் எவ்வித தலையீட்டையும் மேற்கொள்ளவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

பிரபல வைத்தியசாலை ஒன்றில் இவ்வாறான ஓர் சம்பவம் இடம்பெற்றமை வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ளார்.