Reading Time: < 1 minute

கனடாவில் அரசியல் தலையீடுகளில் ஈடுபட்டதாக இந்தியா மீது மீண்டும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

கனடிய கான்சர்வேட்டிவ் கட்சியின் தலைமைத்துவ போட்டியின் போது இவ்வாறு அரசியல் தலையீடு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்திய முகவர்கள் இந்த விவகாரத்தில் தலையீடு செய்தனர் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த 2022 ஆம் ஆண்டு கான்சர்வேட்டிவ் கட்சியின் தலைமை பதவிக்காக பற்றிக் பிரவுன் போட்டியிட்டபோது இவ்வாறு அவரது தலைமையை மலினப்படுத்தும் முயற்சிகளில் இந்தியா ஈடுபட்டது என தெரிவிக்கப்படுகிறது.

பிரவுன் சீக்கிய சமூகத்துடன் நெருங்கிய தொடர்பு பேணி வரும் நிலையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.