Reading Time: < 1 minute
கனடாவில் அரசியல்வாதிகள் மீதான துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசியல்வாதிகளை இலக்கு வைத்து இவ்வாறு துன்புறுத்தல்கள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நகராட்சி உறுப்பினர்கள் முதல் பல்வேறு பதவிகளை வகிக்கும் அரசியல்வாதிகள் இவ்வாறு அச்சுறுத்தல்களையும் துன்புறுத்தல்களையும் எதிர்நோக்கி வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தனிப்பட்ட வாழ்க்கையை இலக்கு வைத்தும் துன்புறுத்தல்கள் மேற்கொள்ளப்படுவதாக அரசியல்வாதிகள் தெரிவிக்கின்றனர்.
அண்மைக்காலமாக அரசியல்வாதிகள் மீதான அழுத்தங்கள் அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
அரசியல்வாதிகள் எதிர்நோக்கும் இவ்வாறான நெருக்குதல்களுக்கு தீர்வு வழங்கும் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டியது அவசியமானது என சுட்டிக்காட்டுகின்றனர்.