கனடாவில் அரசியல்வாதிகளின் பாதுகாப்பினை பலப்படுத்துவதற்கு அந்நாட்டு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இவ்வாறு கூடுதல் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சர் கிறிஸ்டியா ப்ரீலாண்ட, வெளிவிவகார அமைச்சர் மெலெனி ஜோலி மற்றும் அவசர ஆயத்தநிலை அமைச்சர் ஹார்ஜிட் சாஜின, என்.டி.பி கட்சியின் தலைவர் ஜக்மீட் சிங் ஆகியோர் உள்ளிட்ட சில அரசியல்வாதிகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுவது வழமையானது என்ற போதிலும் கனடாவில் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது விசேடமான விடயமாக கருதப்படுகின்றது.
அண்மையில் அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மெலிஷா லான்ட்ஸ்மானுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பாதுகாப்பு வழங்குவதனால் பெருமளவு செலவுகள் ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.