Reading Time: < 1 minute
கனடாவில் நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக 136 க்கும் மேற்பட்ட காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
தீயைக் கட்டுப்படுத்த போராடும் பிரிட்டிஷ் கொலம்பியாவில், அவசர சேவைகளுக்கு உதவ இராணுவ விமானங்களை அனுப்பியுள்ளதாக மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.
கடந்த வாரம் முதல் குறித்த வெப்பநிலை காரணமாக 719 பேர் திடீர் மரணத்தை தழுவியிருந்த நிலையில் பலர் இருப்பிடங்களை விட்டு வெளியேறவேண்டிய நிலையும் ஏற்பட்டது.
கடந்த செவ்வாய்க்கிழமை கனடாவின் முன்னெப்போதும் இல்லாத அளவில் 49.6 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் நேற்று முன்தினம் 12,000 மின்னல் தாக்கம் ஏற்பட்டதாகவும் அதன்பின்னரே 136 காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகியதாகவும் மாகாணத்தின் காட்டுத்தீயை அணைக்கும் பிரிவு தெரிவித்துள்ளது.