கனடாவில் அதிக அளவு எலிகளை கொண்ட நகரமாக டொரன்டோ நகரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹோர்ர்கிங் கனடா என்ற அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது
கனடாவின் 25 நகரங்களில் முன்னெடுக்கப்பட்ட தகவல் திரட்டுகை ஒன்றின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
பிரம்டன் மற்றும் ஒசோவா ஆகிய நகரங்களும் அதிக எலிகளை கொண்ட நகரங்களாக தெரிவிக்கப்படுகிறது.
எத்தனை எலிகள் உள்ளன என்பது குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை எனவும் எலி தொல்லை தொடர்பில் கிடைக்க பெறும் முறைப்பாடுகளை அடிப்படையில் டொரன்டோவில் அதிக அளவு எலிகள் இருப்பதாக ஊகித்துள்ளதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக டொரண்டோ பொதுச் சுகாதார அலுவலகத்திற்கு இவ்வாறான அதிக எண்ணிக்கையிலான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
றொரன்டோவில் எலித் தொல்லை தொடர்பில் சுமார் 400 முறைப்பாடுகள் கிடைக்கப் பெறுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.