Reading Time: < 1 minute

கனடாவில் அதிக எண்ணிக்கையிலான திருட்டு சம்பவங்கள் இடம் பெறுவதாக சில்லறை வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் தங்களினால் வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதில் சவால்களை எதிர் நோக்க நேரிடுவதாக தெரிவித்துள்ளனர்.

ஓராண்டு காலப்பகுதியில் சில்லறை வியாபார நிலையங்களில் இடம்பெறும் திருட்டுச் சம்பவங்களின் காரணமாக சுமார் ஐந்து பில்லியன் டாலர்கள் வரையில் நட்டம் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

கனடிய சில்லறை வர்த்தக நட்ட தடுப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

கோவிட் பெருந்தொற்று காலப்பகுதிக்கு முன்னர் இருந்த நிலையை விடவும் தற்பொழுது அதிக எண்ணிக்கையிலான திருட்டு சம்பவங்கள் பதிவாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

திருட்டு சம்பவங்களை வரையறுப்பது தொடர்பில் கடந்த வாரம் சில்லறை வர்த்தக நிறுவன பிரதானிகள் சந்திப்பு ஒன்றையும் நடத்தியுள்ளனர்.

சில்லறை வியாபார நிறுவனங்களில் இடம் பெற்று வரும் திருட்டு சம்பவங்களின் காரணமாக மொத்த வருமானத்தின் 1.8 வீதமான நட்டம் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

நீண்ட காலமாக கனடிய சில்லறை வியாபார நிலையங்களில் திருட்டு சம்பவங்கள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

திட்டமிட்ட அடிப்படையிலான திருட்டு சம்பவங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.