கடனாவில் அடைக்கலம் கோரும் ஏதிலிகளுக்கு இலவச பஸ் டிக்கட்டுகளை அமெரிக்காவின் நியூயோர்க் நகரம் வழங்குவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கியூபெக் மாகாண குடிவரவு அமைச்சர் கிறிஸ்டின் பெரிச்டி இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
நியூயோர்க் நகரிற்கு வரும் ஏதிலிகளை இலவச பஸ் டிக்கட் வழங்கி வேறும் இடங்களில் ஏதிலி கோரிக்கை பெற்றுச் செல்ல உதவுவதாக நகர மேயர் எரிக் எடம்ஸ் தெரிவித்துள்ளார்.
கனேடிய எல்லைப் பகுதி வரையில் பயணம் செய்வதற்கு இவ்வாறு இலவச டிக்கட்கள் வழங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பலவந்தமாக எவரையும் இவ்வாறு அனுப்பவதில்லை எனவும் விரும்பியவர்கள் செல்வதற்கு உதவுவதாகவும் நியூயோர்க் நகர மேயர் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.
சில வேறு இடங்களுக்கு செல்ல விரும்பிய போதிலும் நியூயோர்க் வரையில் மட்டுமே அவர்களினால் பயணிக்க முடிந்திருக்கலாம் எனவும் அவ்வாறனவர்களுக்கு தாம் உதவுவதாகவும் தெரிவித்துள்ளார்.
சிலர் கனடாவிற்கும், சிலர் வெப்பநிலை கூடிய மாநிலங்களுக்கும் செல்ல விரும்புகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், நியூயோர்க் நகரின் இந்த திட்டம் தொடர்பில் கனடா அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து அமெரிக்காவுடன் அதிகாரபூர்வ பேச்சுவார்த்தை நடாத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.