கனடாவில் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு மளிகை பொருட்களின் விலைகள் உயர்வடையும் என தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாடு தழுவிய ரீதியில் மளிகை பொருட்களின் விலைகள் மூன்று தொடக்கம் ஐந்து வீதம் வரையில் அதிகரிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
கியூபெக் மாகாணத்தில் இந்த விலை அதிகரிப்பானது ஐந்து வீதமாக காணப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
கனடிய உணவு விலை அறிக்கை இந்த விடயத்தை சுட்டிக்காட்டி உள்ளது.
நான்கு பேரை கொண்ட ஒரு குடும்பத்திற்கு அடுத்த ஆண்டு மளிகை பொருட்களுக்கு மேலதிகமாக செலவிட நேரிடும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது அடுத்த ஆண்டில் சுமார் 800 டொலர்களை கூடுதலாக மளிகை பொருட்களுக்காக செலவிட நேரிடும் என தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக இறைச்சி வகைகள், மரக்கறி வகைகள், கோபி, பழப் பான வகைகள் என்பனவற்றின் விலைகள் அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
விநியோக சங்கிலி பிரச்சனை, காலநிலை மாற்றம் மற்றும் கனடிய டொலரின் பெறுமதி வீழ்ச்சி போன்ற பல்வேறு ஏதுக்களினால் இவ்வாறு பொருட்களின் விலைகள் அதிகரிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக இறக்குமதியாளர்களின் கொள்வனவு இயலுமை குறைவடைய பொருட்களின் விலைகள் உயர்வடையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.