கனடாவில் அடிப்படை மருத்துவ சேவைகளை பெற்றுக் கொள்வதில் மேலும் நெருக்கடி நிலைமைகள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் சுமார் ஆறு மில்லியன் மக்கள் குடும்ப மருத்துவர்களின் சேவையை பெற்றுக் கொள்ள முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
அதிக எண்ணிக்கையிலான கனடியர்களினால் குடும்ப மருத்துவரின் அடிப்படை சேவைகளை பெற்றுக்கொள்ள முடியாமைக்கான காரணம் குறித்து ஆராயப்பட்டுள்ளது.
இதன் போது குடும்ப மருத்துவர்கள் வேறும் சேவைகளில் ஈடுபடுவதில் நாட்டம் காட்டத் தொடங்கியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
குடும்ப மருத்துவர்கள் ஏதேனும் துறைசார் சிகிச்சைகளில் நிபுணத்துவம் பெற்றிருந்தால் அந்த சிகிச்சையில் கூடுதல் நேரத்தை செலவிடுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் அடிப்படை மருத்துவ சேவைகளை பெற்றுக் கொள்வதில் மக்கள் பெரும் சவால்களையும் சிரமங்களையும் எதிர்நோக்க நேரிட்டுள்ளது.
கனடிய சுகாதார தகவல் நிறுவகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
கோவிட் பெருந்தொற்றின் பின்னர் மருத்துவ சேவைகளின் தரம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.