Reading Time: < 1 minute

கனடாவில் இருந்து நாடு கடத்தப்படவிருந்த கென்ய பிரஜை ஒருவர் இறுதி நேரத்தில் தற்காலிக விசா வழங்கப்பட்டுள்ளது.

கென்யாவை சேர்ந்த சார்லஸ் மவாங்கி என்ற நபர் கனடாவில் இருந்து நாடு கடத்தப்படவிருந்தார்.

நாடு கடத்தப்படுவதற்கு முதல் நாளில் தற்காலிக விசா வழங்கப்பட்டுள்ளது. 48 வயதான மவாங்கி ஓர் ஓரின சேர்க்கையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமது நாட்டில் ஓரினசேர்க்கையாளர்களுக்கு தண்டனை விதிக்கப்படும் என்ற காரணத்தினால் அவர் கனடாவில் அடைக்கலம் கோரி இருந்தார்.

எனினும் அவருக்கு ஏதிலி அந்தஸ்து வழங்க கனடிய அரசாங்கம் மறுத்துவிட்டது நாடு கடத்தப்படுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் இறுதி நேரத்தில் நாடு கடத்தல் உத்தரவு ரத்து செய்யப்பட்டு தற்காலிகமாக வதிவதற்கான வீசா அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மாவாங்கி மற்றும் அவரது ஆதரவாளர்கள் நாடு கடத்தல் உத்தரவிற்கு எதிராக போராட்டம் நடத்தி இருந்தனர்.

மாவாங்கியை நாடு கடத்தக் கூடாது என சுமார் 5000 பேர் கையப்பமிட்டு மகஜர் ஒன்றை கைதளித்திருந்தனர்.

இவ்வாறு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி பாராட்டுவதாக மாவாங்கி தெரிவித்துள்ளார்.