Reading Time: < 1 minute

பிரிட்டிஷ் கொலம்பியாவின் South Okanagan என்ற இடத்தில் வாழ்ந்துவரும் ஹர்தீப் சிங் சஹால், கமல்தீப் கௌர் தம்பதியர் இம்மாதம் 13ஆம் திகதி கனடாவிலிருந்து நாடுகடத்தப்பட இருந்தனர்.

பின்னர், நாடுகடத்தல் ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கப்பட்டிருந்தது.

திடீரென கிடைத்த மகிழ்ச்சியான செய்தி

இந்நிலையில், செவ்வாயன்று மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி ஒன்று ஹர்தீப் குடும்பத்துக்கு கிடைத்துள்ளது. ஆம், நாடுகடத்தல் காலவரையறையின்றி தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அரசு அவர்களுக்குத் தெரிவித்துள்ளது.

மேலும், அவர்கள் ரத்து செய்யப்பட்ட பணி அனுமதிகளை மீண்டும் பெறவும் விண்ணப்பிக்கலாம் என்றும் தம்பதியருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த பகுதியில் வாழும் மக்கள், நண்பர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைவரின் தீவிர முயற்சியாலேயே இது சாத்தியமாகியுள்ளதால், அவர்கள் அனைவருக்கும் ஹர்தீப், கமல்தீப் தம்பதியர் தங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்கள்.

தம்பதியரைவிட கூடுதலாக மகிழ்ச்சியடைந்துள்ளவர் ஹர்தீப்பை பணிக்கமர்த்தியிருந்த Pierre Levesque. அவர்தான் இந்த பிரச்சினையை மக்கள் கவனத்துக்குக் கொண்டுவந்தவர்.

ஹர்தீப், கமல்தீப் தம்பதியருக்கு கனடாவில் பிறந்த கீரத் கௌர் என்னும் ஒரு மகள் இருக்கிறாள். அத்துடன், தம்பதியர் தங்கள் இரண்டாவது குழந்தையை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள், அதாவது கமல்தீப் கர்ப்பமாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.