Reading Time: < 1 minute

அட்லாடிக் சமுத்திரத்தை படகில் கடப்பதற்காக சாகசப் பயணம் புறப்பட்ட ஒரு கனேடியரும் அவரது மனைவியும் கடந்த மாதம் மாயமானார்கள்.

கனேடியரான ப்ரெட்டும் (Brett Clibbery) பிரித்தானியரான அவரது மனைவியான சாராவும் (Sarah Packwood), காற்றை மாசுபடுத்தும் பெட்ரோல் முதலான எவ்வித எரிபொருளும் இல்லாமல், சூரியசக்தி, பேட்டரிகள் போன்றவற்றின் உதவியுடன் இயங்கும் படகொன்றில், அட்லாண்டிக் சமுத்திரத்தைக் கடப்பதற்காக பயணம் புறப்பட்டார்கள்.

ஆனால், கடந்த மாதம், அதாவது ஜூன் மாதம் 18ஆம் திகதி இருவரும் மாயமானார்கள்.

அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது தெரியாத நிலையில், இம்மாதம், அதாவது, ஜூலை மாதம் 12ஆம் திகதி, கனடாவின் Nova Scotiaவுக்கு அருகே, Sable தீவில் அவர்கள் இருவரது உயிரற்ற உடல்களும் கரையொதுங்கின.

தம்பதியருக்கு என்ன நடந்தது என்பது தெரியாத நிலையில், அதைக் கண்டுபிடிப்பதற்காக கனேடிய பொலிசார் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.

பிரெட்டும் சாராவும் தங்கள் படகை விட்டுவிட்டு உயிர் காக்கும் படகொன்றில் பயணித்துக்கொண்டிருக்கும்போது, அவ்வழியே வந்த பெரிய சரக்குக் கப்பல் ஏதாவது இவர்களுடைய சிறிய படகின்மீது மோதியிருக்கலாம் என்னும் கோணத்தில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

பிரெட் தனது சகோதரிக்கு தனது சிறுநீரகங்களில் ஒன்றை தானம் செய்வதற்காக லண்டன் வந்தபோது லாராவை சந்தித்துள்ளார்.

இருவரும், இப்போது அவர்கள் பயணித்துவரும் படகிலேயே, கனடாவில் வைத்து திருமணம் செய்துகொண்டார்கள்.

ஆக, தம்பதியரின் வாழ்வையும் திருமணத்தையும் போல, அவர்களுடைய மரணமும் கடலிலேயே நிகழ்ந்துவிட்டது!