Reading Time: < 1 minute

கனடாவிற்கு கடுந்தொனியில் ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.

அண்மையில் ரஷ்ய விமானம் ஒன்றை கனடிய அரசாங்கம் பறிமுதல் செய்திருந்தது கனடாவின் பியசர்சன் விமான நிலையத்தில் நீண்ட காலம் தரித்து நின்ற விமானம் ஒன்று இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டது.

உக்ரைன் மீதான சட்டவிரோத படையெடுப்பினை கண்டிக்கும் நோக்கில் இவ்வாறு விமானம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் கனடிய பிரதமர் ட்ரூடோ, உக்கிரேனுக்கு விஜயம் செய்திருந்த போது இந்த விடயம் பற்றி குறிப்பிட்டிருந்தார்.

விமானம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் கனடிய அரசாங்கத்தின் நிலைப்பாட்டிற்கு ரஷ்யா, தற்பொழுது பதில் அளித்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் முறிவடையும் நிலையில் காணப்படுவதாக ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த பறிமுதல் செய்யப்பட்ட விமானத்தை உக்கிரனிடம் ஒப்படைக்கவோ அல்லது அதனை விற்று அந்த பணத்தை உக்ரைனிடம் வழங்கவோ கனடிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கடந்த எட்டாம் திகதி அமைச்சரவை உத்தரவிற்கு அமைய அதிகாரப்பூர்வமாக விமானம் பறிமுதல் செய்யப்பட்டது.