லிபரல் கட்சியின் மார்க் கார்னி நாளையதினம் தனது அமைச்சரவையுடன் இணைந்து கனடாவின் 24ஆவது பிரதமராக உத்தியோகபூர்வமாக பதவியேற்கவுள்ளார்.
லிபரல் கட்சித் தலைமை தேர்தலில் 131,674 வாக்குகள் பெற்று முதல் சுற்றிலேயே வெற்றி பெற்ற கார்னி, தற்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் இருந்து அதிகாரத்தை பெற்றுக்கொள்ள உள்ளார்.
பிரதமர் மற்றும் கனடிய அமைச்சரவையின் பதவியேற்பு விழா ஒட்டாவாவில் உள்ள ரிடோ ஹால் மண்டபத்தில் நாளை காலை 11 மணிக்கு நடைபெறும் என ஆளுனர் நாயகம் மேரி சைமன் அலுவலகம், உறுதி செய்துள்ளது.
ஒட்டாவா மற்றும் அதன் வெளியே உள்ள முக்கிய அதிகாரிகளுடன் சந்திப்புகளை மேற்கொண்டு, அதிகார மாற்றத்தை வெற்றிகரமாகச் செய்ய அரசு தரப்பு நடவடிக்ககைள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இவர் இதற்கு முன்னர் இங்கிலாந்து மத்திய வங்கியின் ஆளுநராக பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.