கனடாவின் வோகன் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து சம்பவம் ஒன்றில் வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இரண்டு வாகனங்கள் மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.
விபத்தில் சுமார் 80 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்துகுள்ளான வாகனம் ஒன்றில் பயணம் செய்த பெண் ஒருவரே விபத்தில் உயிரிழந்து உள்ளதாக யோர்க் பிராந்திய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் காயமடைந்த பெண் மேகன்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சை வழங்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தில் மற்றும் ஒரு நபர் காயமடைந்திருந்தார் எனவும் அவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டு இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
Comments are closed, but trackbacks and pingbacks are open.