Reading Time: < 1 minute
கனடாவின் மொன்ட்ரியல் பகுதியியில் சிறிதளவான நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
திங்கட்கிழமை இரவு வேளையில் இந்த நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இரவு 9.23 மணியளவில் சுமார் 3.7 ரிச்டர் அளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளது.
மொன்ட்ரியல் பகுதியில் இந்த நில அதிர்வு தெளிவாக உணரப்பட்டுள்ளது. சுமார் பத்து கிலோ மீற்றர் பரப்பிற்கு நில அதிர்வு உணரப்பட்டதாகவும், எவ்வித சேதங்களும் பதிவாகவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
தங்களது பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டமை குறித்த விபரங்களை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வாகனமொன்று மோதியது பேன்றும், குண்டு வெடிதத்து போன்றும் உணரப்பட்டதாக பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தனர்.