கனடிய லிபரல் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களில் ஒருவரான சீமோஸ் ஓரீகன் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
ரீகன் தொழில் அமைச்சராக கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தாம் அடுத்த பொது தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அவர் அறிவித்துள்ளார்.
மூக ஊடக பதிவு ஒன்றின் மூலம் தனது ராஜினாமா குறித்து அவர் அறிவித்துள்ளார்.
நீண்ட காலமாக லிபரல் கட்சியின் உறுப்பினராக ரீகன் கடமையாற்றி வருகின்றார் என தெரிவிக்கப்படுகிறது.
தனிப்பட்ட காரணங்களின் அடிப்படையில் தான் அரசியலில் இருந்து விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பொது தேர்தல் வரையில் ரீகன் தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினராக பதவியில் நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சி பதவியில் இருந்து விலகுதல் மற்றும் அரசியல் இருந்து ஒதுங்குதல் ஆகியன மிகவும் கடினமான தீர்மானங்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
மூன்று தேர்தல்களில் தம்மை மக்கள் தெரிவு செய்துள்ளதாகவும் அதற்காக அனைவருக்கும் நன்றி பாராட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
குடும்பத்தின் நல நலனுக்காக இந்த தீர்மானத்தை எடுப்பதாகவும் நல்ல கணவனாக நல்ல தந்தையாக நல்ல நண்பனாக தமது பணியை தொடர விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமது பதவி விலகுதல் குறித்த தீர்மானத்தை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் அறிவித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தொழில் அமைச்சர் பதவிக்கு ஏற்படக்கூடிய வெற்றிடத்திற்கு வேறு ஒருவர் நியமிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.