கனடாவின் மீது இந்திய ஹாக்கர் குழு ஒன்று சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கனடாவின் முக்கிய நிறுவனங்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த குழு ஒன்று இந்த தாக்குதலை நடத்தியதாக சந்தேகிக்கப்படுகின்றது.
அரசாங்கத்தினால் கட்டுப்படுத்தப்படும் சில நிறுவனங்களை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும் இந்த தாக்குதலினால் பெரிய அளவு பாதிப்புகள் ஏற்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கனடிய ராணுவத்தின் இணையதளம் அலைபேசி பயனர்களினால் பார்வையிட முடியாது இருந்ததாகவும் சைபர் தாக்குதலே இதற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடிய ராணுவம் நாடாளுமன்றம் உள்ளிட்ட இணையதளங்களை இலக்கு வைத்து இந்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கனடிய தேர்தல் திணைக்களத்தின் இணையதளமும் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகி இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதல் சம்பவங்கள் குறித்து விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கனடாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் ராஜதந்திர முரண்பாட்டு நிலைமை நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.