கனடா-சீனா வர்த்தக உறவுகள் குறித்து லிபரல் தலைவரும் பிரதமருமான மார்க் கார்னி (Mark Carney), எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சீனா, கனடாவின் பெறுமதிகளுக்கு (values) இணங்காது என்பதால் பன்னாட்டு வர்த்தக ஒத்துழைப்பில் மிகுந்த கவனம் தேவை என தெரிவித்துள்ளார்.
கனடா-சீனா உறவுகள் தற்போது மோசமான நிலையில் உள்ளதாகவும் இரு நாடுகளும் பொருட்களுக்கு பரஸ்பர வரி விதிப்பு மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அண்மைய பேட்டிகளில் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவுகளை மேம்படுத்த விருப்பம் தெரிவித்ததோடு, இலவச வர்த்தக ஒப்பந்தம் (Free Trade Agreement) தொடர்பாகவும் பேச்சுவார்த்தைகள் இருக்கலாம் என்று ஓட்டாவாவில் உள்ள சீன தூதர் சுட்டிக்காட்டினார்.
ஆசியாவில் பல நாடுகளுடன் நெருங்கிய உறவுகளை ஏற்படுத்த முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
சீனாவுடன் வர்த்தக நடவடிக்கைகள் இருக்கலாம், ஆனால் அவை கனடிய தரநிலைகளை பூர்த்தி செய்ய வேண்டும் எனவும் அதேசமயம், நாங்கள் மிகுந்த கவனமாக செயல்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.