நாட்டில் கடந்த ஆண்டு ஜுலை மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் பணவீக்கம் குறைவடைந்துள்ளது.
கடந்த மாதம் நாட்டின் பணவீக்க வீதம் 7.6 வீதமாக காணப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் நாற்பது ஆண்டுகளில் பதிவான அதி கூடிய பணவீக்க வீதமாக 8.1 வீத பணவீக்கம் பதிவாகியிருந்தது.
கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதத்தின் பின்னர் முதல் தடவையாக ஓராண்டுக்கு முன்னர் இந்த பண வீக்கத்தை விடவும் குறைந்தளவு பணவீக்கம் பதிவாகியுள்ளது.
எரிபொருட்களின் விலை வீழ்ச்சியே இவ்வாறு பணவீக்கம் குறைவடைவதற்கான பிரதான ஏதுவெனத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஜுன் மாதம் எரிபொருட்களின் விலைகள் 54.6 வீதத்தினால் எரிபொருள் விலை உயர்வடைந்திருந்தது எனவும், ஜுலை மாதம் இந்த தொகை 35.6 வீதமாக குறைவடைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், உணவுப் பொருட்களின் விலைகள் தொடர்ச்சியாக உயர்வடைந்து செல்லும் போக்கினை அவதானிக்க முடிவதாக தெரிவிக்கப்படுகின்றது.