Reading Time: < 1 minute

கனடிய அரசாங்கத்தின் நடவடிக்கைகளினால் தனது பிள்ளைகளை பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என கல்கரியைச் சேர்ந்த நபர் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

ரஸ்யாவிற்கு எதிரான தடைகளினால் நேரடிப் பாதிப்புக்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தமது குடும்பம் ரஸ்யாவில் வாழ்ந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

பொருளாதாரத் தடைகளினால், தமது பிள்ளைகளை பராமரிப்பதற்கு பணம் அனுப்பி வைக்க முடியாத நிலை உருவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேற்குலக நாடுகள் ரஸ்யாவுடனான சர்வதேச நிதி கொடுக்கல் வாங்கல்கள் வழிமுறைகளை முடக்கியுள்ளன.

இதன் காரணமாக இரண்டு பிள்ளைகளையும் பராமரிப்பதற்காக பணம் அனுப்பி வைப்பதில சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ஜாசோன் புரோனியஸ் தெரிவித்துள்ளார்.

15 வயது மகள் மற்றும் 11 வயது மகன் ஆகியோருக்கு குறித்த நபர் மாதம் தோறும் 2400 டொலர்களை அனுப்பி வைப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.