காலநிலை மாற்றங்களினால் ஏற்படக்கூடிய நோய்களை கட்டுப்படுத்துவதற்கு கனடாவின் சுகாதாரக் கட்டமைப்பு பலவீனமாக காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் காலநிலை மாற்றத்தினால் ஏற்படக்கூடிய நோய்கள் பாரியளவில் பாதிப்பினை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவர்கள் இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளனர்.
சுத்தமான வளி, உணவு மற்றும் நீர் கிடைக்கப் பெறுவதற்கான சாத்தியங்கள் உள்ளிட்ட பருவநிலை மாற்றங்களினால் ஏற்படக்கூடிய நோய்கள் என்பனவற்றினால் தாக்கம் செலுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றங்களினால் வெறுமனே பொருளாதார பாதிப்பு ஏற்படுவதில்லை எனவும் நீண்ட கால அடிப்படையில் உடல் உபாதைகள் ஆரோக்கிய கேடுகள் ஏற்படும் ஆபத்து காணப்படுவதாக மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடந்த ஆண்டு பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஏற்பட்ட வெப்ப அலை தாக்கம் காரணமாக சுமார் 600 மரணங்கள் சம்பவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
காலநிலை மாற்றம் காரணமாக இவ்வாறான அனர்த்தங்கள் ஏற்படுவதாகவும் மேலும் பல்வேறு நெருக்கடிகள் ஏற்படும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.