கனடாவில் சீக்கிய செயற்பாட்டாளர் கொல்லப்பட்டமைக்கு இந்திய அரசாங்கமே காரணம் என்ற கனடாவின் குற்றசாட்டுக்கு அவுஸ்திரேலியா ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளது.
இதனை அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங்கின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து உயர்மட்டத்தில் கரிசனைகளை பரிமாறிக்கொண்டதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவிற்கு பெரும் தலைவலியாக மாறக்கூடும்
அதேவேளை அவுஸ்திரேலியா கனடாவும் பைவ்ஐஸ் உடன்படிக்கை மூலம் தகவல்களை பரிமாறிக்கொள்கின்றன. எனினும் கனடாவின் சந்தேகம் குறித்து ஜி20 மாநாட்டிற்கு அவுஸ்திரேலிய பிரதமர் சென்றவேளை அவுஸ்திரேலியாவிற்கு தெரியுமா என்பதை அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவிக்க மறுத்துள்ளனர்.
கனடாவில் இந்திய அரசாங்கத்தின் உத்தரவின் கீழ் ஒருவர் கொல்லப்பட்டுள்ள விவகாரம் அவுஸ்திரேலிய இந்திய வர்த்தக உறவுகள் வேகமாக வலுவடைந்து வரும் நிலையில் அவுஸ்திரேலியாவிற்கு இது பெரும் தலைவலியாக மாறக்கூடும்.
கனடாவில் சீக்கியர் கொலையின் பின்னணியில் இந்திய அரசாங்கம்
கனடாவில் சீக்கிய செயற்பாட்டாளர் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்திய அரசாங்கம்உள்ளதாக விசாரணைகள் இடம்பெறுவது குறித்து அவுஸ்திரேலிய ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர்,
அனைத்து நாடுகளும் இறைமை மற்றும் சட்டத்தின் ஆட்சியை மதிக்கவேண்டும் என அவுஸ்திரேலிய கருதுவதாக தெரிவித்துள்ளார். அத்துடன் அபிவிருத்தி சகாக்களுடன் நாங்கள் நெருக்கமான ஈடுபாடுகளை கொண்டுள்ளோம் எங்கள் கரிசனைகளை உயர்மட்டத்தில் தெரிவித்துள்ளோம் எனவும் கூறினார்.
அவுஸ்திரேலியாவில் உள்ள சமூகத்தினர் சிலருக்கு இந்த தகவல் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தும் என தெரிவித்த அவர், அது தொடர்பில் தாங்கள் கரிசனை கொண்டுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.