Reading Time: < 1 minute

கனடாவில் அண்மைக் காலமாக இடம்பெற்று வரும் குற்றச் செயல்கள் தொடர்பில் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

பிணையில் விடுதலை செய்யப்படும் நபர்களினால் வன்முறைச் சம்பவங்கள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக மாகாண முதல்வர்களுடன் அவசர சந்திப்பு ஒன்று நடாத்த பொலிஸார் திட்டமிட்டுள்ளது.

அவசர சந்திப்பு ஒன்றுக்கு அனுமதி வழங்குமாறு மாகாண பொலிஸ் பிரதானிகள், மாகாண முதல்வர்களிடம் எழுத்து மூலம் கோரியுள்ளனர்.

அண்மைய நாட்களாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொலை செய்யப்படும் சம்பவங்கள் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

இந்தக் குற்றச் செயல்களின் பின்ணியை கவனத்திற் கொண்டால், அநேகமான சம்பவங்களின் பின்னணியில் பிணையில் விடுதலை செய்யப்பட்டவர்கள் இருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நான்கு வருடங்களுக்கு முன்னதாக பிணை வழங்குதல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தங்களின் பின்னர் இந்த சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாகாண காவல்துறை பிரதானிகளின் ஒன்றியத் தலைவர் டேனி ஸ்மித் இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளார்.