Reading Time: < 1 minute

கனடாவின் ஒட்டாவா நகரில் பொலிஸார் கரடியொன்றை சுட்டுக் கொன்றுள்ளனர்.

கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக மக்கள் குடியிருப்புக்களுக்கு அருகாமையில் இருந்த காரணத்தினால் பொலிஸார் கரடியை சுட்டுக் கொன்றுள்ளனர்.

கரடியொன்று வீடுகளுக்கு அருகாமையில் சஞ்சரிப்பதாக பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து குறித்த பகுதிக்கு சென்ற பொலிஸார், வீடுகளுக்கு மிக அருகாமையில் கரடி சஞ்சரித்த நிலையில் பொதுமக்களின் பாதுகாப்புக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களை கருத்திற் கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

அந்த இடத்திலிருந்து பாதுகாப்பான முறையில் கரடியை மீட்பதற்கு எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்த காரணத்தினால் இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, வீடுகளுக்கு அருகாமையில் உணவுக் கழிவுகளை போட வேண்டாம் என நகர நிர்வாகம் கோரியுள்ளது.