Reading Time: < 1 minute

பொதுமக்கள், அரசியல்வாதிகள் மற்றும் சொந்தக் கட்சியினரின் கடும் எதிர்ப்புக்கிடையே பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் ஜஸ்டின் ட்ரூடோ.

அதைத்தொடர்ந்து, கனடாவின் அடுத்த பிரதமர் யார் என்பது குறித்த செய்திகள் வெளியாகிவருகின்றன.

விடயம் என்னவென்றால், அடுத்த பிரதமர் யார் என்பதை விட, அடுத்து கனடாவை ஆளப்போவது எந்தக் கட்சி என கேட்கலாம்

காரணம், ஜக்மீத் சிங்கின் New Democratic Party அதாவது, NDP கட்சி, ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சிக்கு இதுவரை ஆதரவளித்துவந்தது.

ஆனால், இனி யார் அக்கட்சியில் தலைவராக பொறுப்பேற்றாலும், லிபரல் கட்சிக்கு ஆதரவளிக்கப்போவதில்லை, அக்கட்சியை தோற்கடித்தே தீருவேன் என கங்கணங்கட்டிக்கொண்டிருக்கிறார் ஜக்மீத் சிங்.

ஆக, அதையும் மீறி லிபரல் கட்சி அடுத்த தேர்தலில் வெற்றிபெற்றால்தான் அக்கட்சியைச் சேர்ந்தவர்களில் யார் பிரதமராவார் என்ற கேள்வி எழமுடியும்.

என்றாலும், தங்கள் பங்குக்கு கனடாவின் அடுத்த பிரதமர் யார் என்பது குறித்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

அவ்வகையில், லிபரல் கட்சியைச் சேர்ந்த இந்திய வம்சாவளியினரான அனிதா ஆனந்துக்கு கனடாவின் அடுத்த பிரதமராகும் வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது.

தற்போது போக்குவரத்துத்துறை அமைச்சராக இருக்கும் அனிதாவின் தந்தையான S.V. ஆனந்த், ஒரு தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.

அனிதாவைத் தொடர்ந்து, அடுத்த பிரதமராகும் வாய்ப்பு, சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்த முன்னாள் நிதி அமைச்சரான கிறிஸ்டினா ஃப்ரீலேண்ட் மற்றும் முன்னாள் மத்திய வங்கியாளரான மார்க் கார்னீ ஆகியோருக்கும் உள்ளதாக கூறப்படுகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.