Reading Time: < 1 minute

டொரோண்டோவில் ப்ளூர் வீதியில் பயணித்து கொண்டிருந்த பெண் மீது மோதிய கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த குடியிருப்பொன்றில் மோதி விபத்துக்குள்ளானது.

ரொறென்றோவின் Lansdowne Avenue மற்றும் Wallace Avenue க்களை இணைக்கும் Bloor தெருவின் வடக்கு பகுதியில் தான் இச்சம்பவம் நேற்று (செவ்வாய்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் பொலிஸார் கூறுகையில், குறித்த வாகனம் வீதியில் சென்ற இளம் பெண் மீது மோதியதோடு அங்குள்ள வீட்டின் மீது மோதியது.

விபத்தின் போது அந்த பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு சென்ற மருத்துவர்கள் அவருக்கு முதலுதவி அளித்து மருத்துவனையில் அனுமதித்தனர்.

எனினும், அவரது நிலை பாரதூரமாக இல்லை எனவும், உயிருக்கு ஆபத்தில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

காரைக் கொண்டு மோதிய சாரதி சம்பவ இடத்திலேயே இருந்த நிலையில், அவர் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு விபத்து தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.