கட்சித் தலைமை பதவிக்காக போட்டியிட முடியாது என கட்சி தமக்கு அறிவித்ததாக லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தரா ஆர்யா தெரிவித்துள்ளார்.
லிபரல் கட்சியின் தலைவர் பதவி வகித்து வந்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவியை ராஜினாமா செய்திருந்தார்.
இதனை தொடர்ந்து அந்த பதவி வெற்றிடத்திற்கு கட்சியின் பல உறுப்பினர்கள் போட்டியிடுவதாக அறிவித்திருந்தனர்.
ஒட்டாவா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரா ஆர்யா தலைமைத்துவ பதவிக்காக போட்டியிடப் போவதாக அறிவித்திருந்தார்.
எனினும் கட்சி நிர்வாகம் தம்மை தலைமைத்துவ பதவியில் போட்டியிட முடியாது என அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சமூக ஊடகங்களின் வாயிலாக அவர் இந்த விடயத்தை ஆரம்பித்துள்ளார்.
எனினும் அதிகாரப்பூர்வமாக இந்த விடயம் கட்சி இன்னும் அறிவிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
என்ன காரணத்திற்காக கட்சித் தலைமை பதவிக்கு போட்டியிட அனுமதி மறுக்கப்பட்டது என்பது குறித்த தகவல்களை அவர் வெளியிடவில்லை.
கடந்த இரண்டு வாரங்களாக தமது முயற்சிக்கு ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி பாராட்டுவதாக அவர் தனது சமூக ஊடக கணக்குகளில் தெரிவித்துள்ளார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.