கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை, அவர் சார்ந்த லிபரல் கட்சியிலின் தலைமைப்பதவியிலிருந்து அகற்றுவது தொடர்பில் அவரது கட்சியினர் திட்டமிட்டுவருவதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகிவருகின்றன.
லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், ட்ரூடோ ராஜினாமா செய்யக்கோரி சுமார் 20 நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்து பெற்ற ஒரு கடிதத்தை அவரிடம் கையளிக்க இருப்பதாக ஊடகங்கள் பல செய்தி வெளியிட்டுள்ளன.
இது குறித்து பேசிய புத்தாக்கத்துறை அமைச்சரான François-Philippe Champagne, கருத்தில் கொள்ளவேண்டிய சில பிரச்சினைகள் உள்ளது உண்மைதான் என்றும், அது தொடர்பில் இந்த வார இறுதியில் விவாதிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த விடயம் தொடர்பில் நாளை கூடி விவாதிக்க உள்ளார்கள்.
ட்ரூடோ லிபரல் கட்சித் தலைவராக நீடிக்க ஆதரவு தொடர்பில் கட்சிக்குள் மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.
ஆக, நாளை கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடி விவாதிக்க உள்ளதைத் தொடர்ந்து, ட்ரூடோ லிபரல் கட்சித் தலைவராக நீடிப்பாரா இல்லையா என்பது தெரியவரலாம்.