Reading Time: < 1 minute

கனடாவில் தபால் தொழிற்சங்க போராட்டம் காரணமாக பெரும் எண்ணிக்கையிலான கனடியர்கள் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதில் அசௌகரிங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இதுவரையில் கடவுச்சீட்டு கிடைக்கப்பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது. கனடியா தபால் பணியாளர்கள் நீண்ட போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சஸ்காடுனைச் சேர்ந்த மைக் போட்டேன் என்பவர் எதிர்வரும் ஜனவரி மாதம் இரண்டாம் திகதி மெக்சிகோவிற்கு குடும்பத்துடன் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

இதற்காக அவர் கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வதற்கு விண்ணப்பம் செய்திருந்தார்.

கடவுச்சீட்டு November 27 ஆம் திகதி கிடைக்க பெற வேண்டும் எனினும் இதுவரையில் கடவுச்சீட்டு கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

மெக்சிகோ பயணத்திற்காக தற்காலிக அடிப்படையிலான பயண ஆவணங்களையேனும் பெற்றுக் கொள்ள முயற்சிக்கப் போவதாக அவர் தெரிவிக்கின்றார்.

இவ்வாறு பெரும் எண்ணிக்கையிலான கனடியர்கள் கடவுச்சீட்டை பெற்றுக் கொள்ள முடியாது சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.