Reading Time: < 1 minute

கடந்த கால துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளுக்கு, கூட்டாட்சி அரசு விரைவில் தடை விதிக்கவுள்ளது. இந்த நடவடிக்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அரசாங்கத்தின் நீண்டகால உறுதிப்பாடாக விளங்கும் இந்த தடையில், லாஸ் வேகாஸ், அட்லாண்டோ மற்றும் சாண்டி ஹூக் ஆகிய இடங்களில் பொதுமக்களின் மீதான துப்பாக்கிச் சூடுகளில் பயன்படுத்தப்படும் துப்பாக்கிகள் தடை செய்யப்படவுள்ளன.

இந்த பட்டியலில், ருகர் மினி -14, எம்14 பகுதியளவுத் தானியங்கி, பெரெட்டா சிஎக்ஸ் 4 ஸ்டார்ம், சிஎஸ்எ-விஇசட்-58 ஆகியன அடங்கும்.

தற்போதைய சட்டத்தின் கீழ், கனடாவில் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களின் பட்டியலில் துப்பாக்கிகளைச் சேர்ப்பது கூட்டாட்சி ஒழுங்கு-சபை மூலம் செய்யப்படலாம். அதற்கு புதிய சட்டம் தேவையில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.