ஒன்ராறியோவில் எதிர்வரும் புதிய ஆண்டில், கஞ்சா சில்லறை விற்பனை முறையை விரிவுபடுத்தப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
போட்டியை அதிகரிக்கவும், கறுப்புச் சந்தையை எதிர்த்துப் போராடுவதற்கும் அதிகமான சில்லறை விற்பனை கடைகளை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனை ஒன்றாரியோ முதல்வர் டக் ஃபோர்ட் உறுதி செய்துள்ளதோடு, இதற்கான நடவடிக்கைகளையும் அவர் முன்னெடுத்து வருகின்றார்.
இதுகுறித்து ஒன்றாரியோ முதல்வர் டக் ஃபோர்ட் கூறுகையில், ‘கடந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சிக்கு வந்த பின்னர் கன்சர்வேடிவ் கட்சி, அளித்த வாக்குறுதியின் ஒரு கட்டமாகவே இது அமையவுள்ளது’ என கூறினார்.
கொன்சர்வேற்றிவ் கட்சி ஆரம்பத்தில் மாகாணத்தில் ஆயிரத்து கஞ்சா கடைகள் இருக்கக்கூடும் என்று கூறியிருந்தன.
எனினும் தற்போது விநியோக பற்றாக்குறை காரணமாக 25 சில்லறை உரிமங்களுக்கான வாய்ப்பினை வழங்கவுள்ளது.