Reading Time: < 1 minute

கனடாவின் ஒஷாவில் அமைந்துள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக டர்ஹாம் பிராந்திய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சென்டர் மற்றும் கிப் வீதிகளுக்கு அருகிலுள்ள ஒரு வீட்டில் இரவு 8 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் வீட்டிற்குள் சலனமற்றிருந்த நபர் ஒருவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவர் 76 வயதான புரூஸ் ஸ்கார்லெட் என அயலவர்கள் மற்றும் குடும்பத்தினரால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அந்த நபர் பல தசாப்தங்களாக வீட்டில் வசித்து வந்ததாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர். தீ விபத்திற்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தீ விபத்து தொடர்பில் தகவல்கள் இருந்தால் வழங்குமாறு பொது மக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.