ஒவ்வொரு கனேடியருக்கும் இலவசமாக 10 மருந்தளவு பெறும் அளவிற்கு நாடு பல்வேறு தடுப்பூசி ஒப்பந்தங்களில் 1 பில்லியன் டொலருக்கும் மேல் முதலீடு செய்துள்ளது என நிதி அமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் தெரிவித்துள்ளார்.
இலையுதிர் காலம்-2020க்கான தேசிய பொருளாதார அறிக்கை வெளியிட்ட பின்னர் ஆற்றிய உரையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
‘ஒவ்வொரு கனேடியருக்கும் இலவசமாக 10 மருந்தளவு பெறும் அளவிற்கு நாடு பல்வேறு தடுப்பூசி ஒப்பந்தங்களில் 1 பில்லியன் டொலருக்கும் மேல் முதலீடு செய்துள்ளது. ஒவ்வொரு கனேடியரும் அவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசி இலவசமாக கிடைக்கும் என்று உறுதியளிக்க முடியும்.
இது ஒரு குழு கனடா முயற்சியாகும். 322 பில்லியன் டொலர்களை, வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கும், மக்களுக்கு உதவுவதற்கும் நேரடி நடவடிக்கைகளில் நாடு செலவிட்டுள்ளது. 85 பில்லியன் டொலர் வரி மற்றும் சுங்கவரி ஒத்திவைப்புகளும் உள்ளன’ என்று அவர் கூறினார்.
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கூற்றுப்படி, அரசாங்கத்தால் திட்டமிடப்பட்ட பெரிய அளவிலான தடுப்பூசி வெளியீடுகள் வரலாற்றில் நாட்டின் மிகப்பெரிய நோய்த்தடுப்பு மருந்தாக இருக்கும். செப்டம்பர் 2021க்குள் பெரும்பாலான கனேடியர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்று பிரதமர் கணித்துள்ளார்.