Reading Time: < 1 minute

தடுப்பூசி எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, கனடாவையும் அமெரிக்காவையும் இணைக்கும் பாலத்தில் குவிந்திருந்த போராட்டக்கார்களை கனேடிய பொலிசார் அகற்றியதைத் தொடர்ந்து, அந்த பாலத்தில் மீண்டும் போக்குவரத்து துவங்கியுள்ளது.

கனடா மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான சரக்குப் போக்குவரத்தில் 25 சதவிகிதம், கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள விண்ட்சர் என்ற இடத்தையும், அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்திலுள்ள Detroit நகரத்தையும் இணைக்கும் Ambassador Bridge என்னும் பாலத்தின் வழியாகத்தான் நடந்து வருகிறது.

கனேடிய சாரதிகள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி பெற்றிருக்கவேண்டும் என மத்திய அரசு அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், Ambassador Bridge பாலத்தின் கனேடிய பகுதியில் கனேடிய டரக் சாரதிகள் போராட்டத்தில் ஈடுபட, இரு நாடுகளுக்கும் இடையிலான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதனால், சுமார் 850 மில்லியன் டொலர்கள் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.