Reading Time: < 1 minute

ஒமிக்ரோன் மாறுபாடு அச்சம் காரணமாக, கனடாவின் ஒன்றாரியோவின் நீண்ட கால பராமரிப்பு இல்லங்களில், பொது வருகைகள் நிறுத்தப்பட்டுள்ளது.

சமூகத்தில் பரவும் ஒமிக்ரோன் வைஸசால் பாதிக்கப்படக்கூடிய குடியிருப்பாளர்களை வெளிப்படுத்தும் அபாயத்தைக் குறைக்க இந்த கொள்கை இன்று (வியாழக்கிழமை) முதல் நடைமுறைக்கு வருகின்றது.

இதுகுறித்து நீண்டகால பராமரிப்பு அமைச்சர் ராட் பிலிப்ஸ் கூறுகையில், ‘இந்த நடவடிக்கைகள் பல குடும்பங்களை பாதிக்கும் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால், நாம் குறிப்பாக புதிய ஓமிக்ரோன் மாறுபாட்டிற்கு எதிராக விழிப்புடன் இருக்க வேண்டும்.

இன்று முதல், ஒரு குடியிருப்பில் இரண்டு நியமிக்கப்பட்ட பராமரிப்பாளர்கள் மட்டுமே பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள்.

மற்ற அனைத்து பொது வருகைகளும் காலவரையின்றி இடைநிறுத்தப்படும். மேலும் சமூக காரணங்களுக்காக குடியிருப்பாளர்கள் வெளியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள். மருத்துவ சந்திப்புகள் போன்ற அத்தியாவசிய காரணங்களுக்காக இல்லாதது தொடரலாம். மக்கள் நோய்த்தடுப்பு வருகைகளுக்காக வீடுகளுக்குள் நுழையலாம்’ என கூறினார்.