கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் இடம்பெற்ற படகு விபத்து சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டாவது சந்தேக நபரை போலீசார் கைது செய்து குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்.
ஒன்றாரியோ மாகாண பொலிஸார் இந்த விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த படகு விபத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டிருந்தனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் ஏற்கனவே ஒருவரை பொலிஸார் கைது செய்திருந்தனர்.
இவ்வாறான ஓர் பின்னணியில் மற்றைய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த மே மாதம் 18ம் திகதி இந்த படகு விபத்து இடம்பெற்றிருந்தது.
இந்த படகு விபத்தில் 21 முதல் 23 வயது வரையிலான மூன்று பேர் கொல்லப்பட்டிருந்தனர்.
மேலும் இந்த சம்பவத்தில் 21 வயது முதல் 44 வயது வரையிலான ஐந்து பேர் காயமடைந்திருந்தனர்.
குறித்த சந்தேக நபர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் எவை என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.
Comments are closed, but trackbacks and pingbacks are open.