Reading Time: < 1 minute

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் மதுபான விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்ட காரணத்தினால் பல மளிகை கடைகள் மூடப்படுவதில் இருந்து தப்பிக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒன்றாரியோ மாகாண மளிகை கடை ஒன்றியம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

மாகாண அரசாங்கம் அண்மையில் மளிகை கடைகளிலும் மதுபான வகைகளை விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கியிருந்தது.

இதனைத் தொடர்ந்து தமது கடைகளுக்கு வருமானம் கிடைப்பதாக மளிகை கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மாகாணத்தின் பல வர்த்தக நிறுவனங்களுக்கு இந்த மதுபான விற்பனை அனுமதியானது வாய்ப்பாக அமைந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

முதல்வர் டக் போர்ட் தலைமையிலான அரசாங்கம் மதுபான விற்பனையை மளிகைக் கடைகள் வரையில் விஸ்தரிக்க நடவடிக்கை எடுத்திருந்தது.

இதன் காரணமாக பல மளிகைக் கடைகள் நன்மை பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.