ஒன்றாரியோவில் சிறிய ரக விமானமொன்று விபத்துக்கு உள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஒன்றாரியோ மாகாணத்தின் ஸ்டார்ட்போர்ட்டில் இந்த விபத்துச் சம்பவம் பதிவாகியுள்ளது. பேர்த் வீதி 109க்கும் பேர்த் வீதி 110க்கும் இடையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த விமான விபத்து குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆண் ஒருவர் இந்த விமானத்தை செலுத்தியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது,
எனினும் உயிரிழந்த நபரின் ஆள் அடையாள விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. ஸ்டார்ட்போர்ட் விமான நிலையத்திற்கு ஒரு கிலோ மீற்றர் தொலைவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இரண்டு என்ஜின்களைக் கொண்ட சிறிய ரக விமானமொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் விசாரணை நடாத்தும் நோக்கில் விசேட குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் இடம்பெற்ற பகுதியின் பாதை சில மணித்தியாலங்களுக்கு மூடப்பட்டிருக்கும் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.