Reading Time: < 1 minute

ஒன்றாரியோ மாகாணத்தின் தலைமை மருத்துவ அதிகாரியாக மருத்துவர் கீரன் மூர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜூன் 26ஆம் திகதி, மருத்துவர் டேவிட் வில்லியம்சிடமிருந்து சுகாதாரத்தின் தலைமை மருத்துவ அதிகாரியாக பொறுப்பேற்க உள்ளதாக சுகாதார அமைச்சர் கிறிஸ்டின் எலியட் அறிவித்தார்.

கீரன் மூர், 2011ஆம் ஆண்டு முதல் கிங்ஸ்டன், ஃபிரான்டெனாக், லெனாக்ஸ் மற்றும் ஆடிங்டன் ஆகியவற்றின் சுகாதார மருத்துவ அதிகாரியாக இருந்து வருகிறார்.

கடந்த 2016ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம், முந்தைய லிபரல் அரசாங்கத்தின் கீழ் வில்லியம்ஸ் தலைமை மருத்துவ அதிகாரியானார்.

முதல்வர் டக் ஃபோர்டின் முற்போக்கு கன்சர்வேடிவ் அரசாங்கம் அவரை நவம்பரில் மீண்டும் நியமித்தது. அவர் 2021ஆம் ஆண்டு செப்டம்பர் முதலாம் திகதி வரை அந்த பதவியில் நியமிக்கப்பட்டார். ஆனால் இப்போது ஜூன் 25ஆம் திகதி அவர் ஓய்வு பெறுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.