கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் பார்மஸிகள் (மருந்தகங்கள்) மருந்து வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சில வகை நோய்களுக்கு மருந்தாளர்களிடமிருந்து, மருந்து பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாகாணம் முழுவதிலும் காணப்படும் மருந்தகங்களில் இவ்வாறு மருந்துகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
ஒன்றாரியோ சுகாதார அமைச்சர்; சில்வியா ஜோன்ஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
மருத்துவமனைகளில் நீண்ட நேரம் காத்திருப்பதனை தவிர்க்கும் நோக்கில் இவ்வாறு மருந்தகங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பட்டியலிடப்பட்டுள்ள 16 நோய்களுக்கு மேலதிகமாக ஆறு நோய்களுக்கு பார்மஸிகளில் மருந்து வழங்கப்பட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவர்களின் மருந்துச் சீட்டு இன்றி மருந்தகங்களிலேயே இந்த நோய்களுக்கு மருந்து வகைகளை பெற்றுக்கொள்ள முடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.