Reading Time: < 1 minute

ஒன்றாரியோ மாகாணத்தின் மது பிரியர்களுக்கு ஒரு நற்செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

மாகாணத்தின் மளிகை கடைகளில் மதுபான வகைகளை கொள்வனவு செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் மாதம் முதல் இவ்வாறு மதுபான விற்பனை தொடர்பான கெடுபிடிகள் தளர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மாகாணத்தின் 3866 மளிகை கடைகளுக்கு பியர் மற்றும் வயின் வகைகளை விற்பனை செய்வதற்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

இவற்றில் 1617 நிலையங்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காணப்படும்ட சிறு மளிகை கடைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 5-ம் திகதி முதல் குறிப்பிட்ட மளிகை கடைகளில் பியர் மற்றும் வயின் போன்றவற்றை கொள்வனவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிக இடங்களில் மதுபான விற்பனையை மேற்கொள்வதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு உரிமம் வழங்கப்படும் நிறுவனங்கள் சில நியமங்களை பின்பற்ற வேண்டும் என ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த கடைகளில் பணியாற்றும் பணியாளர்கள் 18 வயதிற்கும் மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.