Reading Time: < 1 minute

ஒன்றாரியோ மாகாணத்தில் வாழ்ந்து வரும் மதுப் பிரியர்கள் இணைய வழியில் மதுபானம் கொள்வனவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுபானம் அருந்துவதற்கான சட்ட ரீதியான வயது எல்லையை பூர்த்தி செய்தவர்கள் இவ்வாறு இணைய வழியில் மதுபானம் கொள்வனவு செய்ய முடியும்.

ஊபர் ஈட்ஸ் செயலியின் ஊடாக LCBO நிறுவனத்திடமிருந்து இணைய வழியில் மதுபானம் கொள்வனவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

19 வயது மற்றும் அதற்கும் மேற்பட்டவர்கள் இவ்வாறு கொள்வனவு செய்ய முடியும் ஊபர் ஈட்ஸ் நிறுவனத்தின் பேச்சாளர் கீர்த்தனா ராங்க் தெரிவித்துள்ளார்.

பியர், வைன் மற்றும் ஏனைய மதுபான வகைகளை இவ்வாறு கொள்வனவு செய்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுபான வகைகளை இணைய வழியில் கொள்வனவு செய்து தங்களது வீடுகளுக்கே தருவித்துக் கொள்வதற்காக 5.49 டொலர்கள் கட்டணம் அறவீடு செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குடித்து விட்டு வாகனத்தை செலுத்துவதனை விடவும் இவ்வாறு வீட்டுக்கே மதுபானத்தை தருவித்துக் கொள்வது ஆபத்து குறைந்தது என தெரிவிக்கப்படுகின்றது.