Reading Time: < 1 minute

ஒன்றாரியோ மாகாண மக்களிடம் முதல்வர் டக் போர்ட் அவசர கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.

முடிந்த எல்லா நேரங்களிலும் முக கவசங்களை அணிந்து கொள்ளுமாறு பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இயலுமான அனைத்து நேரங்களிலும் முக கவசம் அணிதல் முதனிலையானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாதவர்கள் உடன் தடுப்பூசிகளை ஏற்றிக் கொள்ளுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

எரிவாயு விலை குறித்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சன நடமாட்டம் கூடிய இடங்களில் முக கவசங்களை அணிந்து கொள்ளுமாறு மாகாண பிரதம மருத்துவ அதிகாரி டொக்டர் கிரேன் மூர் பொதுமக்களிடம் அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.